இன்றைய சினிமா என்று தலைப்பை பார்த்த உடன் நாங்க அந்த காலத்து ஆளுங்கங்னு நெனச்சிடாதிங்க. நாங்களும் இருவத்தி மூணு வயசு பசங்க தான். இப்போ நம்ம தமிழ் சினிமா இருக்குற மிக பெரிய பிராப்லம் டைரக்டர் அமீர் தான். அவர் தான் பருத்தி வீரன் னு ஒரு படம் எடுத்து அவர் பாட்டுக்கு சீமான் கூட சேர்ந்து கிட்டு இலங்கை, போராட்டம், ஜெயில்னு போய்ட்டார். இப்ப புதுசா வர டைரக்டர் கூட அந்த மாதிரி படம் நாங்களும் எடுக்குறோம் னு கிளம்பிடனுங்க. அதுக்கு தகுந்த மாதிரி எல்லா ஹீரோவும் தாடி வச்சிக்கிட்டு, ராஜ் கிரண் மாதிரி வேட்டியா தூக்கி கட்டி கிட்டு பண்ற அலம்பல் இருக்கே ஐயோயோயோயோ......... எல்லாம் தயாரிப்பாளர்களின் பசங்க போல. ஏன்டா உங்களுக்கு பணத்த செலவு பண்ண வேற வழியே இல்லனா அனாதை குழந்தைகளுக்கு கொடுங்க. அதா விட்டுட்டு ஏன் இப்படி இருக்குற குழந்தைகளை அனாதை ஆக்குறீங்க? (பின்ன, இந்த படத்த பாக்குற
அப்பனும் ஆத்தாளும் செத்து போறாங்க)
உதா'ரணத்துக்கு' சமீபத்துல வந்த 'தா' னு ஒரு படம். அதுல ஹீரோ பருத்தி வீரன் கார்த்தி மாதிரி வரேன் னு சொல்லிட்டு, நல்ல நாலு பாட்டில் வெளக்கெண்ணை குடிச்ச மாதிரி இருக்கான். ஒரு வசனம் சொல்ல தெரியல, சிரிக்க தெரியல, ஒரு மண்ணும் வரல.அவன் எல்லாம் திருவிழாவுல ராட்டினம் சுத்த தான் லாயக்கு.